சிங்கப்பூரில் அதிகரிக்கும் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் டெங்கு காய்ச்சலின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
டெங்கு காய்ச்சலால் 13,600 க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கையானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 37 சதவீதம் அதிகம் என்று தேசிய சுற்றுச்சூழல் நிறுவனம் கூறியுள்ளது.
நோய் பரவாலானது அதிகரித்துள்ள போதிலும், ஏடிஸ் கொசு ஒழிப்புத் திட்டமும், பொது விழிப்புணர்வும் நிலைமையைச் சமாளிக்க உதவுவதாக சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு (2024) அக்டோபர் முதல் டிசம்பர் வரை சிங்கப்பூரில் 5,600 இடங்களில் ஏடிஸ் கொசுக்கள் பரவி இருப்பது தெரிய வந்தது.
இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 15 சதவீதம் அதிகமாகும்.
கடந்த வாரம் 121 பேருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது.
சமீபத்திய நிலவரப்படி, சிங்கப்பூரில் 20 இடங்களில் டெங்கு பரவியுள்ளது.
இதனால் பொதுமக்கள் வீடுகளையும் சுற்றியுள்ள பகுதிகளையும் சுத்தப்படுத்தி அவ்வபோது பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளித்து சுகாதாரத்துடன் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.