சிங்கப்பூரில் அதிகரித்துள்ள டெங்கு சம்பவங்கள்!!

சிங்கப்பூரில் அதிகரித்துள்ள டெங்கு சம்பவங்கள்!!

சிங்கப்பூரில் கடந்த வாரம் மார்ச் மாதம் 22ஆம் தேதி சனிக்கிழமை வரை நிலவரப்படி ஒரே வாரத்தில் 102 டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

இது அதற்கு முந்தைய வாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது கடந்த வாரம் 30 பேர் கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஆண்டு மொத்தம் 1136 டெங்கு சம்பவங்கள் பதிவாகி இருப்பதாக தேசிய சுற்றுப்புற அமைப்பு அதன் இணையப்பக்கத்தில் தெரிவித்துள்ளது.

அங் மோ கியோ அவென்யூ 2, ஜாலான் செங்காம், செம்பவாங் ஹில் டிரைவ் ஆகிய பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான டெங்கு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

அங்கு மொத்தம் 73 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர்.