பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!!

பாம்புடன் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்த தம்பதி..!!!

மலேசியாவின் ஜொகூர் பாருவில் ஒரு தம்பதியினர் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் சவாரி செய்துள்ளனர்.

இந்த ஜோடியின் அதிரடி வீடியோ டிக்டோக்கில் வைரலாகி வருகிறது.

இந்த தம்பதியினர் வீட்டில் மலைப் பாம்பு ஒன்று நுழைந்திருக்கிறது.

இச்சம்பவம் குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அரை மணி நேரம் கடந்தும் யாரும் வராததால் வேலைக்குச் செல்ல
நேரமாகிவிட்டதால் தம்பதியினர் தாங்களாகவே வீட்டில் இருந்து மலைப்பாம்பை அகற்ற முடிவு செய்தனர்.

அவர்களது வீட்டில் ஏற்கனவே பாம்பு பிடிக்கும் கருவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் பாம்பை இருவரும் சேர்ந்து பிடித்துள்ளனர்.

பாம்பை ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

இந்நிலையில் இவர்கள் மலைப்பாம்பை பிடித்துக் கொண்டு பயணம் செய்த வீடியோவானது @imrine23 என்ற கணக்கில் பதிவேற்றப்பட்டது.

கணவனுக்குப் பின்னால் மனைவி வாலைப் பிடித்தபடி மோட்டார் சைக்கிளில் அமர்ந்திருக்கிறார்.

கணவன் ஒரு கையில் பாம்பின் தலையை பிடித்தபடி மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார்.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் இவர்களின் தைரியத்தை கண்டு பாராட்டினர்.

‘பாம்பை தேடிப் போவதாக அதிகாரிகள் நினைத்தார்கள்… ஆனால் பாம்பு அவர்களைத் தேடி வந்தது…’ என்று சிலர் கேலியான கமெண்டுகளை பதிவிட்டுள்ளனர்.

 

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==