சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!!

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்த நிறுவனத்தின் இயக்குனர்!!

சிங்கப்பூரில் ஊழியர் ஒருவர் உயிரிழந்த இடத்தில் மாற்றம் செய்ததற்காக நிறுவனத்தின் இயக்குனருக்கு 8000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் செருப்புகளை கழற்றி பாதுகாப்பு காலணிகளை வைக்கும்படி லிம் சூன் ஹூவீ ஊழியர் ஒருவருக்கு உத்தரவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Dyna-Log Singapore எனும் தளவாட நிறுவனம் ஒன்றில் 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 22ஆம் தேதி அன்று நிகழ்ந்த விபத்தில் திரு.யோங் ஹிம் சோங் என்பவர் உயிரிழந்தார்.

ஒரு கொள்கலனில் இருந்த ரப்பர் பலகைகளை பழுது பார்த்துக் கொண்டிருக்கும்போது அந்த பலகைகள் திரு.யோங் மீது விழுந்தது.

577 கிலோ எடையுடைய அந்த பலகைகளின் அடியில் சிக்கிய திரு யோங் உயிரிழந்தார்.

அவர் அப்போது காலணிகள் அணிந்து இருந்ததாகவும்,
நிறுவனத்தின் பாதுகாப்பு விதிமுறைகளின் படி காலணிகள் அணிவதற்கு அனுமதி இல்லை.

யோங்கின் கால்களில் இருந்த காலணிகளை அகற்றிவிட்டு பாதுகாப்பு காலணிகளை அங்கு வைக்கும்படி லிம் ஊழியர்களிடம் கூறினார்.

விசாரணை நடத்தும் அதிகாரிகளுக்கு தவறான தகவல் கொடுப்பதற்காக லிம் அவ்வாறு செய்தார் என்று மாவட்ட நீதிபதி சுட்டிக்காட்டினார்.

Dyna-Log Singapore என்ற நிறுவனத்தில் தகுந்த பாதுகாப்பு விதிமுறைகள் இருந்த போதும் அவ்வாறு பின்பற்றப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

இந்த நிலையில்
Dyna-Log Singapore நிறுவனத்திற்கு 200000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.