ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஒளிரும் வண்ண விளக்குகள்…!!!

ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டை முன்னிட்டு ஒளிரும் வண்ண விளக்குகள்...!!!

சீனப் புத்தாண்டைக் கொண்டாட ஹாங்காங் தயாராகிறது.

ஹாங்காங்கில் பண்டிகைக் காலங்களில், இரவு வானத்தை அலங்கரிப்பது போன்ற வண்ணமயமான விளக்குகள் பார்வையாளர்களை பிரமிப்பில் ஆழ்த்தும் வகையில் அமைந்திருக்கும்.

பெரிய பண்டிகைகளின் போது மக்களின் பண்டிகை உற்சாகத்தை அதிகரிக்க கண்கவர் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஒளி வெள்ளத்தில் மிதக்கும் போது சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கூடுதல் முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது.

2010 ஆம் ஆண்டில், filament எனும் மெல்லிய கம்பி இழை விளக்குகள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக பயன்படுத்தப்பட்டது.

இது கிறிஸ்துமஸ் காலங்களில் மட்டும் 1.5 மில்லியன் கிலோவாட் மின்சாரம் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டது.

ஒரு வருடம் கழித்து ஹாங்காங் அரசாங்கம் LED விளக்குகளின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் திட்டங்களை அறிவித்தது.

2012 முதல் 2022 வரை, பண்டிகை விளக்குகளின் மின்சார பயன்பாடு தொடர்ந்து குறைந்து வந்தது.