கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!!

கழுதையை வரிக்குதிரையாக மாற்றிய சீனாவின் கேளிக்கைப் பூங்கா!!

சீனாவின் ஷான்டோங் வட்டாரத்தில் உள்ள ஒரு பொழுதுபோக்கு பூங்கா, கழுதைக்கு வரிக்குதிரை போல சாயம் பூசி தோற்றத்தை மாற்றியுள்ளது.

Niushan Amusement park எனும் பொழுதுபோக்கு பூங்கா அதன் வளாகத்தில் ஒரு வரிக்குதிரை இருப்பதைக் காட்டும் காணொளியை சமூக ஊடகத்தில் வெளியிட்டது.

அந்த காணொளியில் வரிக்குதிரை உண்மையில் ஒரு கழுதை என்று சீன ஊடகமான Da wan news தெரிவித்தது.

பூங்காவின் விளம்பரத்திற்காக அவ்வாறு செய்ததாக ஊழியர்கள் உறுதிப்படுத்தினர்.

கழுதைக்கு பூசப்பட்ட சாயம் எந்த ஒரு ஆபத்தை விளைவிக்க கூடியது இல்லை என்றும் அது விரைவில் மங்கி விடும் என்றும் அவர்கள் Da Wan news ஊடகத்திடம் தெரிவித்தனர்.

சீனாவில் இதற்கு முன்பு நாய்களுக்கு சாயம் பூசப்பட்ட சில சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

சில விலங்கு தோட்டங்களில் நாய்கள் பார்ப்பதற்கு பாண்டா கரடிகள் போல் இருந்தனர்.

பார்வையாளர்களை ஈர்ப்பதற்காக அவ்வாறு செய்த நிறுவனங்கள் கடுமையாக கண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.