அறிவியல் உலகம் இதுவரை பல்வேறு தொழில்நுட்பங்களை தனது சாதனையின் மூலம் புதிது புதிதாக கண்டுபிடித்து வந்தாலும், அவை அனைத்தும் மனிதனின் மூளையை இதுவரை மிஞ்சவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.
செயற்கை தொழில்நுட்பம் எனப்படும் AI டெக்னாலஜியை தற்பொழுது எல்லா துறைகளிலும் பயன்படுத்தும் முயற்சியை மேற்கொண்டு வந்தாலும், அவற்றின் யோசிக்கும் திறன் அளவுக்கு வராது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இப்படியா சொல்றீங்க? என யோசித்து பார்த்த சீன விஞ்ஞானிகள் தற்பொழுது செயற்கை தொழில்நுட்பத்தை மிஞ்சும் அளவிற்கு புது டெக்னாலஜி புத்தி உள்ளனர். ரோபோவின் தலையில் மனித மூளையை போன்று செல்களை வடிவமைத்து அதை ரோபோவிற்கு பொருத்தி சோதனை செய்துள்ளனர்.
மற்ற ரோபோக்கள் அனைத்தும் ப்ரோக்ராம்கள் போன்றவற்றை நம்பி இருக்கும் நிலையில், இந்த ரோபோக்கள் மனித செல்களின் மாதிரி கொண்ட செல்களின் துணையுடன் யோசிக்கும் என்றும் கூறப்படுகிறது.
8 லட்சம் எண்ணிக்கை உள்ள மனித செல்களை ஒரு சிப்பில் பொருத்தி அதை ரோபோவிற்கு பொருத்தியுள்ளதால், இதன் யோசிக்கும் திறன் ஆனது செயற்கை நுண்ணறிவை விட வேகமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இவை அறிவியல் தொழில்நுட்பம் மகிழக்கூடிய விஷயம் தான் என்றாலும், மனிதனைப் போல சிந்திக்கும் ரோபோ நடைமுறைக்கு வந்தால் அது மனித குலத்திற்கு ஆபத்து என்று கூறுகின்றனர். அவை பிற்காலத்தில் மனிதனை மிஞ்சுமலருக்கு யோசிக்க கூடும் என்பதால் இந்த விபரீதாய்வை நிறுத்துவதை சிறந்தது எனக் கூறி வருகின்றனர்.