நாளை நடைபெறவிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி!! ரவி சாஸ்திரி கணிப்பு!!
9 வது ஐசிசி சாம்பியன் டிராபி நாளை பிப்ரவரி மாதம் ஒன்பதாம் தேதி ஞாயிற்றுக்கிழமை(நாளை) பிற்பகல் 2:30 மணி அளவில் துபாயில் நடைபெற உள்ளது.
இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த போட்டியை அடுத்து வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் இந்த போட்டியில் ஆட்ட நாயகன் விருது வெல்ல வாய்ப்புள்ள வீரர்கள் பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி தனது கணிப்பினை கூறியுள்ளார்.
அவரது கணிப்பின்படி ஆல்ரவுண்டர்களான இந்தியாவின் ஜடேஜா மற்றும் அக்சர் பட்டேல் நியூசிலாந்தின் கிளென் பிலிப்ஸ் ஆகிய மூன்று பேரில் ஒருவர் இறுதிப் போட்டியில் ஆட்டநாயகன் விருதை வெல்வதற்கான வாய்ப்பு உள்ளதாக கூறினார்.
இந்தப் போட்டியில் இந்திய வீரர் விராட் கோலி, நியூசிலாந்து வீரர்கள் வில்லியம்சன் மற்றும் ரச்சின் ரவீந்திரன் ஆகியோர் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் அவர் கூறினார்.