BSNL நிறுவனம் விரைவில் 5G சேவையை தொடங்கும்……அடித்தது ஜாக்பாட்……

BSNL நிறுவனம் விரைவில் 5G சேவையை தொடங்கும்......அடித்தது ஜாக்பாட்......

மத்திய அரசுக்கு சொந்தமான மற்றும் தொலைத்தொடர்பு சேவையில் ஈடுபட்டு வரும் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) இப்போது நாடு முழுவதும் 4ஜி சேவைகளை வழங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில் தொலைத்தொடர்பு துறையிடம் இருந்து ரூபாய் 61,000 கோடி மதிப்பிலான 5ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு பிரீமியம் ஸ்பெக்ட்ரம் அலைகற்றைகளை தொலைத்தொடர்பு ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 700 எம்எச்இசட், 3300 எம்எச்இசட் ஆகிய அலைக்கற்றைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிஎஸ்என்எல் நிறுவனம் 5g சேவைகளை நாடு முழுவதும் விரிவாக்குவதற்கு முன்னர் டெல்லியில் தொடங்கி குறிப்பிட்ட நகரங்களில் 5g அலைக்கற்றைகளை அறிமுகப்படுத்த முடியும்.

பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 5ஜி அலைக்கற்றை ஒதுக்கப்பட்டுள்ளது என்ற செய்தி வெளியானதை தொடர்ந்து நேற்று பங்குச்சந்தையில் டாடா நிறுவனத்தின் தேஜாஸ் நெட்வொர்க் பங்கின் விலை கிடு கிடுவென உயர்ந்தது.

மும்பை பங்குச்சந்தையில் நேற்று வர்த்தகத்தின் இடையே இந்தப் பங்கின் விலை 12 விழுகாட்டிற்கு மேல் உயர்ந்து ₹902.70 வரை சென்றது.

வர்த்தகத்தின் முடிவில் இந்தப் பங்கின் விலை 9.10 சதவீதம் அதிகரித்து ₹876.25 ரூபாய் நிலை கொண்டது.

கடந்த நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் தேஜாஸ் நெட்வொர்க்ஸ் 27000 தளங்களுக்கு உபகரணங்களை வழங்கி உள்ளது.

2024-2025 ஆகிய நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனத்தின் மொத்த வருவாயில் 94 விழுக்காடு இந்தியாவில் இருந்து வந்தது.

குறிப்பாக பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி தொடர்பான டிசிஎஸ் நிறுவனத்திற்கு உபகரணங்களை அனுப்பியதால் கிடைத்தது.

தேஜாஸ் நெட்வொர்க் நிறுவனம் கடந்த டிசம்பர் காலாண்டில் வருவாயாக ₹2642 கோடி ஈட்டியுள்ளது.

மேலும் அந்த நிறுவனம் அதே காலாண்டில் நிகர லாபமாக 165 கோடி ரூபாய் ஈட்டியது.