பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!!

பாரதிராஜாவின் மகன் மனோஜ் காலமானார்!! வெளிவரும் சில தகவல்கள்!!

நேற்று காலை கராத்தே மாஸ்டர் உசைனி அவர்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அவர் இறந்த செய்தி கேட்டு அனைவரும் தங்கள் இரங்கல் செய்திகளை தெரிவித்து வந்தனர்.

அந்த சோகம் மறைவதற்கு முன் நேற்று மாலை யாரும் எதிர்ப்பாராத ஒரு செய்தி வந்தது.

இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் அவர்கள் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

இவருக்கு வயது 48.

மாரடைப்பின் காரணமாக உயிரிழந்த மனோஜ் அவர்களுக்கு திரை பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் அவர் பற்றிய பல தகவல்கள் தற்போது கசிந்து வருகிறது அதில் எந்திரன் ரஜினிக்கு அவர் டூப் போட்ட விஷயமும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

நடிகராக அறிமுகமான மனோஜ் சங்கர் மற்றும் மணிரத்தினம் ஆகிய இயக்குநர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றினார்.

அதேபோலத்தான் எந்திரன் படத்திலும் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார்.

இப்போது ரஜினி அவர்களுக்கு டூப் போட்ட போட்டோக்கள் இப்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதில் இணையவாசிகள் மிஸ் யூ சிட்டி என கனத்த இதயத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.

இயக்குநர் கனவோடு இருந்த மனோஜ் கடந்த 2023 ஆம் ஆண்டு மார்கழி மாதம் என்ற படத்தை இயக்கியது குறிப்பிடத்தக்கது.