ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டி: கோல் இன்றி டிராவில் முடிந்த சிங்கப்பூர்-ஹாங்காங் ஆட்டம்!!

ஆசியக் கிண்ணக் கால்பந்து போட்டி: கோல் இன்றி டிராவில் முடிந்த சிங்கப்பூர்-ஹாங்காங் ஆட்டம்!!

2027 ஆம் ஆண்டு ஆசிய கிண்ணக் கால்பந்து போட்டி தகுதிச்சுற்றில் சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் அணிகள் மோதிய ஆட்டம் கோல் எதுவுமின்றி டிராவில் முடிந்தது.

இந்த ஆட்டம் தேசிய விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி மிகவும் விறுவிறுப்பாக இருந்த நிலையில் பெரும்பாலான நேரங்களில் சிங்கப்பூர் அணியே ஆதிக்கம் செலுத்தியது.

ஆட்டம் ஆரம்பித்த இரண்டாவது நிமிடத்திற்குள் சிங்கப்பூர் கார்னர் மூலம் கோல் அடித்தது.ஆனால் நடுவர் அதை நிராகரித்து விட்டார்.

அதனைத் தொடர்ந்து இரு அணிகளும் கோல் அடிப்பதற்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் நழுவ விட்டன.

ஆட்டத்தின் 77 வது நிமிடத்தில் சிங்கப்பூர் அணி அடித்த கோலும் தவறு காரணமாக நிராகரிக்கப்பட்டது.

கடந்த வாரம் நடைபெற்ற போட்டியில் சிங்கப்பூர் அணி நேபாள அணியிடம் 1-0 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

ஜூன் மாதம் நடைபெறும் அடுத்த ஆட்டத்தில் சிங்கப்பூர் மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு அணிகளும் மோதும்.

சிங்கப்பூர் கடைசியாக 1984 ஆம் ஆண்டில் ஆசிய கிண்ணத்துக்கு போட்டியை ஏற்று நடத்தும் நாடு என்ற அடிப்படையில் தகுதி பெற்றது.