நம்ம பசங்க என்னமா விளையாடுறாங்க…!!! 3 அதிரடி பேட்ஸ்மேன்களை பாராட்டிய அஸ்வின்…!!!

நம்ம பசங்க என்னமா விளையாடுறாங்க...!!! 3 அதிரடி பேட்ஸ்மேன்களை பாராட்டிய அஸ்வின்...!!!

இங்கிலாந்துக்கு எதிராக உள்நாட்டில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாடி வரும் இந்திய அணி, ஐந்து போட்டிகளின் முடிவில் 4-1என்ற கணக்கில் தொடரை வென்று சாதனை படைத்துள்ளது.

ரோஹித் சர்மா கேப்டன் பதவியில் இருந்து விலகியதை அடுத்து டி20 அணியின் புதிய கேப்டனாக சூர்யகுமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

அவரது தலைமையில் இந்தியா தொடர்ந்து வெற்றிகளை குவித்து வருகின்றது.இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி முற்றிலும் மாறுபட்ட அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்திய அணியை வெற்றிகரமாக வழிநடத்தி வரும் சூரிய குமாரின் கேப்டன்சியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

அந்தவகையில் டி20 கிரிக்கெட்டின் வடிவமைப்பை அதிரடியாக மாற்றிய இந்திய அணியின் செயல்பாடு பார்வையாளர்களிடையேயும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் புனேவில் நடந்த கடைசி போட்டியில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடினர். அந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரிங்கு சிங் ஆகியோர் சிறப்பாக விளையாடினர், இருப்பினும் டாப் ஆர்டர் வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

அவர்களின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய அஸ்வின்,இந்திய அணியின் டாப் பேட்ஸ்மேன்கள் வெளியேறி 181 ரன்களை எடுத்தது என்பது கடந்த 10 ஆண்டுகளில் இல்லாதது.ஆனால் தற்போதைய பாண்டியா, துபே, ரிங்கு சிங் ஆகியோர் பாராட்டப்பட வேண்டிய வீரர்கள். அவர்கள் சூழலுக்கு ஏற்றவாறு மரியாதை கொடுத்து பின்னர் ஆக்ரோஷமாக செயல்படுகிறார்கள்.

இந்திய அணிக்கு நீண்ட நாட்களாக சிக்சர் அடிப்பவர் இல்லை என்றும், தற்போது திறம்பட சிக்ஸர் அடிக்கும் வீரர்கள் அதிகம் கிடைத்துள்ளதால் இந்திய டி20 அணியின் எதிர்காலம் சிறப்பாக உள்ளது என்று அவர் பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==