அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!!

அமெரிக்கா அஞ்சல் சேவையின் மீண்டும் ஓர் அறிவிப்பு!!

அமெரிக்கா அஞ்சல் சேவை சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொட்டலங்களை நிறுத்தி வைத்திருப்பதாக அறிவித்திருந்தது.

அந்த அறிவிப்பு வந்து ஒரு நாளுக்குள் மீண்டும் ஓர் அறிவிப்பை அறிவித்தது.

சீனா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து வரும் பொட்டலங்களை அமெரிக்கா மீண்டும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது.

விநியோகங்கள் எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படாமல் சீனாவிடம் இருந்து வரித்தகையை பெற முயற்சி எடுக்கப்படும் என்று அஞ்சல் சேவை கூறியது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சீனப்பொருட்கள் மீதான வரிகளை விதிப்பதாக சமீபத்தில் அறிவித்தார்.

அதன்படி குறைந்த மதிப்புடைய பொருட்களுக்கு கொடுக்கப்பட்ட வரிவிலக்கும் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அமெரிக்காவில் அண்மை காலங்களாக Shein, Temu போன்ற சீன வர்த்தகர்களிடம் இருந்து வாங்கப்படும் பொருட்கள் கணிசமாக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் இது போன்ற குறைந்த மதிப்புள்ள பொருட்களுக்கு 1.36 பில்லியன் அமெரிக்க டாலர் வரை வரி தள்ளுபடி வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

அமெரிக்கா அறிவித்த வரி விதிப்புக்கு எதிராக சீனாவும் அமெரிக்காவிடம் வாங்கும் பொருள்களுக்கு வரி விதித்துள்ளது.

வர்த்தகம் மற்றும் பொருளியல் பிரச்சனைகள் ஆகியவைகளை ஆயுதமாக அமெரிக்கா பயன்படுத்துகிறது என்று சீன அரசு கூறுகிறது.