SMU பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு..!! மாணவர்கள் மகிழ்ச்சி...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூர் மேலாண்மை பல்கலைக்கழகம் (SMU) சிங்கப்பூரில் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் நிதியுதவி அளிக்கிறது.
நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற 25வது ஆண்டு விழாவில் நிதி ஆதரவு திட்டத்தின் மேம்பாடுகள் அறிவிக்கப்பட்டன.
வருமானத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு அடுத்த கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு 4,000 வெள்ளி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவர்களின் கல்விக் கட்டணமும் முழுமையாக ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.