அனைத்து இறக்குமதிகள் மீதும் குறைந்தது 10% வரி விதிக்கப்படும்……

அனைத்து இறக்குமதிகள் மீதும் குறைந்தது 10% வரி விதிக்கப்படும்......

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அனைத்து இறக்குமதிகள் மீதும் 10% வரி விதிக்கப் போவதாக அறிவித்துள்ளார்.

அமெரிக்காவுடன் பெரிய அளவில் வர்த்தகம் செய்யும் நாடுகளின் பொருட்கள் மீது கூடுதலாக வரி விதிக்கப் போவதாக அவர் தெரிவித்தார்.

டிரம்ப் அதிபரான பிறகு வர்த்தக பூசல் தொடங்கியது.

தற்போது அமலுக்கு வந்துள்ள புதிய அறிவிப்புகள் பூசலை மேலும் மோசமாக்குகிறது.

வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின்போது டிரம்ப் புதிய வரிகள் குறித்து விவரங்களைப் பகிர்ந்து கொண்டார்.

அமெரிக்க வரலாற்றில் இது மிக முக்கியமான நாட்களில் இதுவும் ஒன்று என்று கூறினார்.

பல வருடங்களாக மற்ற நாடுகளில் செல்வம் மற்றும் அதிகாரத்தை பெற்ற போதே கடுமையாக உழைத்த அமெரிக்கர்கள் ஓரங்கட்டப்பட்டதாக அவர் கூறினார்.

இப்போது அமெரிக்கா செழிக்க வேண்டிய நேரம் என்று டொனால்ட் டிரம்ப் தனது உரையில் கூறினார்.

சீனா மீது 34% வரி மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது 20% வரியும் விதிக்கப்படும்.

அமெரிக்க பொருட்கள் மீதான வரிகளுக்கு பதிலடியாக அந்த மாற்றங்கள் செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.