எனவே அவர் அங்கிருந்துச் செல்லும் விமானத்தை தவறவிடலாம் என்று நினைத்தார்.
அந்தப் பெண் கண்ணீர் தழும்ப விமானப் பணிப்பெண்ணிடம் நிலைமையைக் கூறினார்.
பணிப்பெண் அவருக்கு ஆறுதல் கூறி அந்தப் பெண்ணின் நிலைமையை விமானிக்கு விளக்கினார்.
விமானி ஒயிட் செல்ல விருந்த இன்டர்-ரூட் விமானத்தின் ஊழியர்களைத் தொடர்பு கொண்டார்.
ஒயிட் மினசோட்டாவை அடையும் வரை பயணத்தை தாமதப்படுத்த ஏதேனும் வழி இருக்கிறதா என்று அவர் கேட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
அவர்களும் விமானியின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டனர்.
ஒயிட் எப்படியோ அதே இரவில் வடக்கு டகோட்டாவை அடைந்தார்.
அவரது தாயார் இறப்பதற்கு முன்பு அவரால் ஒரு நாள் ஒன்றாகக் கழிக்க முடிந்தது.
“என்னால் என் அம்மாவுடன் கூடுதல் நேரம் இருக்க முடிந்தது, நான் எவ்வளவு நன்றியுள்ளவளாக இருக்கிறேன் என்று யாருக்கும் தெரியாது,” என்று தனக்கு உதவியவர்களுக்கு ஒயிட் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார்.