புதுடெல்லியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக விமான சேவை பாதிப்பு...!!!
இந்திய தலைநகர் புதுடெல்லியில் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் 19 விமானங்கள் பாதை மாற்றப்பட்டது.
பல சேவைகள் ரத்து செய்யப்பட்டதோடு 400க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்தன.
இந்தியாவின் மிகப் பெரிய விமான நிலையமான இந்திரா காந்தி விமான நிலையத்தில் ஏற்பட்ட இடையூறு காரணமாக, நாட்டின் பிற விமான நிலையங்களிலும் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
டெல்லி விமான நிலையத்தில் இரண்டாவது நாளாக பனிமூட்டம் காணப்படுகிறது.