விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!!

விவாகரத்து பிறகு 200 கோடி ஜீவனாம்சம்!! மறுத்த நடிகை!!

நட்சத்திர ஜோடிகள் விவாகரத்து சம்பவங்கள் ஊடகங்களில் அதிகளவு பேசப்படுகிறது.

அதிலும் குறிப்பாக ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையின் விவாகரத்து என்றால் சொல்லவா வேண்டும்.

அப்படி ரசிகர்களுக்கு ஷாக் அளிக்கும் வகையில் வந்த செய்தி தான் சமந்தா மற்றும் நாக சைதன்யா ஆகியோரின் விவாகரத்து.

சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இவர்கள் இருவரும் நான்கு ஆண்டுகள் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2021 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.

விவாகரத்துக்கு பின்னர் நடிகர் நாக சைதன்யா சமந்தாவுக்கு ரூபாய் 200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாக கூறப்படுகிறது.

ஆனால் நடிகை சமந்தா ரூ.200 கோடி ஜீவனாம்சத்தை வாங்க மறுத்துவிட்டார்.

தனக்கு யாருடைய பணமும் தேவையில்லை என்றும் நான் உழைத்து சம்பாதித்துக் கொள்வேன் என்றும் சமந்தா ஜீவனாம்சத்தை நிராகரித்து விட்டாராம்.

இவர் இப்போது இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

இவர் நடிப்பில் சென்ற ஆண்டு வெளியான சிட்டாடல் தொடர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

ஆனால் இவருடைய ஆக்சன் காட்சிகள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.