இதுதான் கிப்ட்… அம்பானி வீட்டு கல்யாணத்தை மிஞ்சும் நெப்போலியன் வீட்டு கல்யாணம்!

Actor nepolean : தமிழ் சினிமாவில் முரட்டு ஹீரோவாகவும், வில்லனாகவும் அறிமுகம் ஆகி ரசிகர்களின் நெஞ்சை கவர்ந்தவர் நெப்போலியன். நடிகனாக மட்டுமல்லாமல் அரசியல் களத்திலும் குதித்து எம்எல்ஏ , எம்பி என பல்வேறு பதவிகளை வகித்தவர்.

இவரது அரசியல் வாழ்க்கை, சினிமா வாழ்க்கை என இரண்டையும் புரட்டி போட்டது தந்தை பாசம் என்றே கூறலாம். நடிகர் நெப்போலியனுக்கு இரண்டு மகன்கள் இருக்கும் நிலையில், அவருக்கு பிறந்த மகன்களில் ஒருவர் பிறவி குறைபாடுடன் பிறந்தவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

மகனுக்கு சிகிச்சை அளிக்க நம் இந்தியாவில் போதுமான வசதி இல்லாததால், அமெரிக்காவில் செட்டில் ஆகி மகனுக்கு வைத்தியம் பார்த்து, அங்க ஐடி துறை மற்றும் விவசாயம் என்னை இரண்டிலும் கலக்கி வருகின்றார். கடந்த சில தினங்களுக்கு முன் இவருடைய மகனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்த செய்தி இனிய முழுவதும் வைரல் ஆகியது.

திருநெல்வேலியில் பெண் பார்த்து நிச்சயம் செய்த நெப்போலியன் மகன் திருமணம் ஜப்பானில் நடக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. பொதுவாகவே பிரபலங்கள் அனைவரும் டெஸ்டினேஷன் வெட்டிங் எனப்படும் வெளிநாடுகளில் திருமணம் செய்வதையே ட்ரெண்டாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் நெப்போலியன் அவரது மகனின் உடல்நிலை கருதி, ஜப்பானில் திருமணம் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. திருமணத்திற்கு பத்திரிக்கை வைக்கும் பணியில் மும்மரமாக பணி செய்து வரும் நெப்போலியன், பத்திரிகை கொடுக்கும் பொழுது கிப்டாக வெள்ளிக் கிண்ணத்தில் பாதாம் பிஸ்தா முந்திரி போன்ற நட்ஸ் வகைகளை வைத்து திருமணத்திற்கு அழைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இப்பொழுதுதான் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடந்து முடிந்து புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகி வரும் நிலையில், நெப்போலியன் மகனின் திருமண புகைப்படங்கள் அதையும் மிஞ்சி விடுமோ என ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.