ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!!

ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் திருக்கை மீன்..!!!

சிங்கப்பூர்: சிலேத்தார் பகுதியில் உள்ள ஹெம்ஸ்டெட் வெட்லேண்ட்ஸ் பூங்காவில் ஒரு பெரிய திருக்கை மீன் காணப்பட்டது.

பொதுமக்கள் அனுமதியின்றி மீனை பூங்காவின் குளத்தில் விட்டிருக்கலாம் என கழகம் தெரிவித்தது.

அதன் புகைப்படம் ஜனவரி 19 அன்று பேஸ்புக்கில் பகிரப்பட்டது.

நிலைமையை கூர்ந்து கண்காணித்து வருவதாக தேசிய பூங்காக் கழகம் தெரிவித்துள்ளது.

பொதுமக்கள் மீன்பிடிப்பதையும், குளத்தில் இறங்குவதையும் தவிர்க்குமாறு மாநகராட்சி அறிவுறுத்தியது.

வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின்படி, அனுமதியின்றி வனவிலங்குகளை பொது இடங்களில் விடுபவர்களுக்கு 5,000 வெள்ளி வரை அபராதம் விதிக்கப்படும்.

இதேபோன்று 2017 ஆம் ஆண்டில், மூன்று விஷமுள்ள மோட்டோரோ ஸ்டிங்ரே எனும் மீனை லோயர் செலிட்டர் நீர்த்தேக்கத்தில் விடுவித்த ஒரு நபருக்கு $2,600 அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.