லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது!!
லண்டனில் உள்ள ஹீட்ரோ விமான நிலையம் நேற்று மூடப்பட்டதால் உலகமெங்கும் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் 8 விமானங்கள் போக்குவரத்து நேற்று பாதிக்கப்பட்டன.
லண்டனுக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று பாதியிலேயே சிங்கப்பூருக்கு திரும்பியது.
அதில் பயணித்த பயணிகள் சிலர் ஏமாற்றம் அடைந்ததாக கூறினர்.
“லண்டனில் பல திட்டங்கள் இருந்தன அவற்றுக்கான பணம் திரும்ப கிடைக்குமா?” என்று சிங்கப்பூரரான சிங்கப்பூரை சேர்ந்த ஜசிந்தா யோங் கூறினார். லண்டனில் இருக்கும் தனது மகளைப் பார்க்க செல்ல இருந்ததாக கூறினார்.
அங்கு இரண்டு வாரங்கள் தங்கி இசை மற்றும் நாடக நிகழ்ச்சிகளுக்கு சென்று லண்டனை சுற்றி பார்க்கவும் திட்டமிட்டிருந்தார்.
பிரிட்டனைச் சேர்ந்த ஜேக் பார்த்லோமியூ மற்றும் ரிஸ் பேக்ஷால் ஆகிய இருவரும் மார்ச் மாதம் 20-ஆம் தேதி பாலியில் இருந்து கிளம்பியதாக கூறினர்.
பாலியில் இருந்து சிங்கப்பூர் வரும் விமானம் ஒரு மணி நேரம் தாமதமானது என்றும் சிங்கப்பூரில் இருந்து லண்டனுக்கு செல்லவிருந்த விமானத்தை தவறவிடும் நிலை ஏற்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
அதேபோல இந்த விமானமும் திரும்பி வந்ததை எண்ணி மிகவும் வருத்தம் அடைந்தனர்.
அதேபோல சிங்கப்பூரைச் சேர்ந்த சில்வெஸ்டர் ஃபிடோர் மற்றும் எமிலி சியாவ் ஆகிய இருவரும் 12 நாள் ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொள்ள நினைத்ததாகவும், அதற்காக நாடுகளுக்கு இடையே பயணம் மேற்கொள்ளும்போது லண்டன் வழி செல்ல திட்டமிட்டதாக கூறினர்.
ஹீத்ரோ விமான நிலையம் மூடப்பட்டதால் தங்களுடைய திட்டங்கள் அனைத்தும் பாதிக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.