உழைத்து சம்பாதித்த பணத்தை நன்கொடையாக அளிக்கும் நபர்..!!!

உழைத்து சம்பாதித்த பணத்தை நன்கொடையாக அளிக்கும் நபர்..!!!

பிரான்ஸைச் சேர்ந்த 43 வயதான திரு.யான் ஐட்பச்சிர் என்பவர் பகுதி நேரமாக வேலை செய்து அதில் கிடைக்கும் பணத்தை நன்கொடையாக வழங்குகிறார்.

2009 முதல் சிங்கப்பூரில் வசிக்கும் அவர், கிராப்பின் பகுதி நேர விநியோகஸ்தராகப் பணியாற்றுகிறார்.

வார நாட்களில் வேலை முடிந்து கிடைக்கும் நேரத்திலும் வார இறுதி நாட்களிலும்
திரு. ஐட்பச்சிர் உணவு விநியோகிக்கச் செல்வார்.

வாரத்திற்கு 10 மணி நேரம் வேலை செய்த
திரு. ஐட்பச்சிர் கடந்த ஆண்டு பிப்ரவரி முதல் இறுதி வரை சுமார் 7,000 வெள்ளி சம்பாதித்தார்.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், வறுமையை ஒழிக்கவும் பாடுபடும் அமைப்புகளுக்கு அவர் உதவி புரிகிறார்.

அதிக சம்பளம் கிடைக்கும் போது பணத்தை கொடுப்பது எளிதான ஒன்றாகும். ஆனால்
20, 25 வெள்ளி சம்பாதிப்பதற்காக வேலை செய்யும்போதுதான் பணத்தின் அருமையை உணர முடிகிறது என்று திரு.ஐட்பச்சிர் கூறினார்.

உணவை விநியோகிப்பதன் மூலம் இந்த ஆண்டு 10,000 வெள்ளி சம்பாதிப்பார் என்று அவர் எதிர்பார்க்கிறார்.

அதையும் நன்கொடையாக வழங்க திரு.ஐட்பச்சிர் முடிவு செய்துள்ளதாகக் கூறினார்.

உதவி செய்வதற்காக உழைக்கும் இவரின் நல்ல மனதை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==