சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் அறிமுகம் கண்டுள்ள புதிய திட்டம்…!!!

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையில் அறிமுகம் கண்டுள்ள புதிய திட்டம்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பெரிய நிறுவனங்கள் தங்கள் விநியோகச் சங்கிலியில் நிலையான செயல்முறைகளைப் பின்பற்றுவதற்காக ஒரு புதிய திட்டம் அறிமுகமாகியுள்ளது.

இதனால் பெரிய நிறுவனங்களுக்கு சேவை வழங்கும் விநியோகஸ்தர்கள் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவி கிடைக்கும்.

இந்த திட்டத்தை முதலில் பயன்படுத்தியவர்களில் மாண்டாய் வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பும் உள்ளது.

க்ரீன் எக்ஸலன்ஸ் திட்டத்தின் கீழ் உயிரியல் பூங்கா இணைப்புப் பேருந்துகளைப் பயன்படுத்துகிறது.

இது மாண்டாய் வனவிலங்கு குழுவிற்கும் சிங்கப்பூர் உற்பத்தியாளர்கள் சங்கத்திற்கும் இடையிலான கூட்டு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

அங்குள்ள சில்லறை விற்பனைக் கடைகள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களை விற்கின்றன.


சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் உற்பத்தி முதல் விற்பனை வரையுள்ள அனைத்து அம்சங்களையும் கடைப்பிடிக்க இத்திட்டத்தின் மூலம் வழி கிடைக்கிறது.

கடந்த ஆண்டு நான்கு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் மிருகக்காட்சிசாலையை பார்வையிட்டனர்.

எனவே அங்கு குப்பைக்கழிவு மேலாண்மையை மேம்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

சேகரிக்கப்படும் குப்பையின் அளவை அளவிடுவதற்கான கருவிகள் விரைவில் நிறுவப்படவுள்ளது.

கழிவுகளை குறைப்பதற்கான கூடுதல் வழிகளும் இத்திட்டத்தின் மூலம் ஆராயப்படும்.