பெருகிவரும் பெருச்சாளி போன்ற உயிரினம்!!அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள வினோதமான முயற்சி!!

பெருகிவரும் பெருச்சாளி போன்ற உயிரினம்!!அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள வினோதமான முயற்சி!!

அமெரிக்காவில் பெருச்சாளி போன்ற தோற்றமுடைய உயிரினத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்துவதற்காக அதை சாப்பிடலாம் என்று அந்நாட்டு மீன் மற்றும் வனவிலங்கு சேவை பிரிவு தெரிவித்துள்ளது.

அந்த உயிரினம் nutria என்றழைக்கப்படுகிறது.அமெரிக்காவின் ஈர நிலப்பகுதிகளில் வாழ்கிறது என்று The New York Times தெரிவித்தது.

அந்த உயிரினங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருப்பதால் ஈரநிலப்பகுதிகள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது.

அதனை கருத்தில் கொண்டு அந்த உயிரினங்களை மக்கள் வேட்டையாடி சமைத்து சாப்பிடலாம் என்று அமெரிக்கா அமைப்பு கூறியது.

nutria என்ற உயிரினம் சுமார் 20 பவுண்ட் எடை உடையது என்று The New York Times தெரிவித்தது.

சிலர் அந்த உயிரினத்தின் சுவை கோழியைப் போன்று இருப்பதாகவும் மேலும் சிலர் அது முயல் சுவையில் இருப்பதாகவும் கூறினர்.