சிங்கப்பூர் : மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்கும் ஓர் காப்பிக்கடை!!
சிங்கப்பூரில் ஜாலான் புசார் பகுதியில் பள்ளி மாணவர்களுக்கு இலவசக் காலை உணவு வழங்கும் காப்பி கடை.
வீராசாமி சாலை, பிளாக் எண் 638 இல் அமைந்துள்ள அந்த காபிக்கடை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் தினமும் 10 மாணவர்களுக்கு இலவச காலை உணவு வழங்குகிறது என்று 8 World செய்தித்தளம் கூறியது.
ஆனால் மாணவர்கள் யாரும் இலவச உணவை வந்து பெற்றுக் கொள்ள வரவில்லை என காபிக்கடையின் நிர்வாகி கூறினார்.
பட்டர்,காயா தடவிய வாட்டிய இரண்டு துண்டு ரொட்டி, இரண்டு அவித்த முட்டைகள்,ஒரு சூடான பானம் ஆகியவைகள் வழங்குவதாக அவர் தெரிவித்தார்.