நோன்பு பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் புதுபொலிவுடன் காட்சி!!

நோன்பு பெருநாளை முன்னிட்டு சிங்கப்பூரில் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் புதுபொலிவுடன் காட்சி!!

சிங்கப்பூரில் நோன்பு பெருநாளை முன்னிட்டு ரயில்கள் மற்றும் பேருந்துகள் புதுப்பொலிவுடன் கண்களுக்கு விருந்தளிக்கின்றன.

நிலப் போக்குவரத்து ஆணையம்,மலாய் மரபுடைமை நிலையம் மற்றும் பல்வேறு போக்குவரத்து நிறுவனங்கள் அந்த முயற்சியில் இணைந்துள்ளன.

இன்று முதல் ஆறு ரயில் பாதைகளில் சில ரயில்கள் மற்றும் பேருந்து சேவைகள் அலங்கரித்து வண்ணமயமாக இருக்கும்.

பாரம்பரிய உடை அணிந்த குடும்பங்களின் வண்ணமயமான புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருக்கும்.

பயணிகள் ரசிக்க உணவு வகைகள், பாத்திக் வடிவங்கள் போன்ற அம்சங்களை க் கண்டு களிப்பதற்காக சேர்க்கப்பட்டுள்ளன.

நோன்பு பெருநாள் பற்றிய தகவல்களும் அதில் இடம்பெற்றிருக்கும்.

அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை பொதுமக்கள் அந்த அலங்காரங்களை கண்டு ரசிக்கலாம்.

நேற்றைய வெளியீட்டு நிகழ்ச்சியில் பயணிகள் மற்றும் விருந்தினர்களுக்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.