சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க புதிய முயற்சி!!

சிங்கப்பூரில் தோட்டக்கலையை ஊக்குவிக்க புதிய முயற்சி!!

இலவச பூங்கா உலா, விதை பரிமாற்றம், தாவரங்களை ஓவியமாக வரையும் பயிற்சிகள் போன்ற நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் நேற்று முதல் பதிவு செய்து கொள்ளலாம்.

சிங்கப்பூரில் வசிக்கும் மக்களிடம் தோட்டக்கலை கலாச்சாரங்களை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த திட்டமும் ஒன்று ஆகும்.

சமூகத் தோட்டக்கலை ஆர்வலர்கள் தங்களின் திறமையை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதற்கான வழிவகையை தேசிய பூங்கா கழகத்தின் புதிய முயற்சிகள் அமையும்.

சிங்கப்பூரில் தோட்டக்கலையில் ஆர்வம் உள்ளவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்வது தான் இத்திட்டத்தின் மிகப்பெரிய லட்சியம் ஆகும்.

20 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் வகையில் Community in Bloom திட்டத்தின் ஒரு பகுதியாக அது அமையும்.

தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ, இத்திட்டம் 2005 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து உள்ளூர் தோட்டக்கலை குழுக்களின் எண்ணிக்கை பத்திலிருந்து இரண்டாயிரத்திற்கும் மேல் வளர்ச்சி அடைந்திருப்பதாக சுட்டிக் காட்டினார்.

48000-க்கும் அதிகமானோரை அந்த திட்டம் ஒருங்கிணைத்து பிணைப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார்.