ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா!!

ஆசியாவின் சாகச அடிப்படையிலான முதல் விலங்கியல் பூங்கா “ரெயின் ஃபாரஸ்ட் வைல்ட் ஆசியா”என்ற விலங்கியல் பூங்கா மார்ச் மாதம் 12ஆம் தேதி புதன்கிழமை திறக்கப்பட்டுள்ளது.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ காலை 9 மணி அளவில் நடைபெற்ற விலங்கியல் பூங்காவின் துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
தெற்கு ஆசிய மழை காடுகளின் வளமான சூழலை பார்வையாளர்களுடன் இணைக்கும் இந்த பூங்காவின் புதிய முயற்சிகளை அமைச்சர் பாராட்டி கூறினார்.
இந்த பூங்காவில் 75% அதிகமான உயிரினங்கள் அழியும் நிலையில் இருக்கும் இனங்களை சேர்ந்தவைகள் என்பதை திருவாட்டி ஃபூ சுட்டிக்காட்டினார்.
மக்கள் அங்கு இருக்கும் விலங்குகளை கண்டு ரசிக்கும் வசதிகள் அமைக்கப்பட்டதோடு அவைகளைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அவைகளை பாதுகாக்கவும் பல்வேறு முயற்சிகளை இந்தப் பூங்காவில் எடுக்கப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்தார்.
அதை வெளிப்படுத்தும் விதமாக அழிந்து வரும் உயிரினமான பிலிப்பைன்ஸ் புள்ளிமான் கன்றுக்குட்டி ஒன்று இனப்பெருக்கத்தின் மூலம் பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி இங்கு பிறந்தது.
நாம் அக்கறை மற்றும் அர்ப்பணிப்புடன் செயல்பட்டால் வனவிலங்குகளின் அழிவுகளை தடுக்க முடியும் என்ற நம்பிக்கையை இந்நிகழ்வு ஏற்படுத்துகிறது என்று அமைச்சர் கூறினார்.
மேலும் அங்கு இயற்கையான குளிரூட்டல் முறை, பாதுகாக்கப்பட்ட மர கூட்டங்கள், தேனீக்களை கவரும் தாவரங்கள் ஆகியவை உள்ளூர் சுற்றுச்சூழலை வலுப்படுத்தும் வகையில் வடிவமைப்பு இருப்பதை அமைச்சர் திருவாட்டி அவர்கள் பாராட்டினார்.
இந்த பூங்காவின் முதல் ஆண்டில் ஏறத்தாழ ஒன்பது லட்சம் பேர் வருகை புரிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக மாண்டாய் வனவிலங்கு குழுமத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மைக் பார்க்களே தெரிவித்தார்.
இதனுடன் இந்த வருட இறுதிக்குள் சிங்கப்பூர் விலங்கியல் தோட்டத்திற்கு வெளியே `எக்ஸ்ப்லோரியா’ `கியூரியோசிட்டி’என்ற பெயரைக் கொண்ட இரண்டு புதிய உப்புற சுற்றுலாத்தலங்களும் திறக்கப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஏப்ரல் மாதம் 2-ஆம் தேதி திறக்கப்பட உள்ள மாண்டாய் ரெயின் ஃபாரஸ்ட் ரிசார்ட் பை பனியன் விடுதியில் மொத்தம் 338 அறைகள் உள்ளது.
FOLLOW US ON MORE ⏬:
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==