கிரெடிட் கார்டு பயன்படுத்துபவரா நீங்கள்!! இப்பதிவு உங்களுக்கு தான்!!

இணையத்தளத்தில் பொருள் வாங்கும் போது கிரெடிட் கார்டு விவரங்களை வழங்கும்போது கவனமாக இருக்குமாறு பொதுமக்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
இது தொடர்பாக சிங்கப்பூர் காவல்துறை, சிங்கப்பூர் இணைய பாதுகாப்பு அமைப்பு மற்றும் சிங்கப்பூர் நாணய வாரியம் ஆகியவை இணைந்து அறிக்கை வெளியிட்டது.
திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் Mobil Wallets எனப்படும் கட்டண சேவையுடன் இணைக்கப்பட்டதாக குறைந்தது 656 புகார்கள் பெறப்பட்டுள்ளன.
இவை 2024 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி முதல் டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை பதிவு செய்யப்பட்ட புகார்கள்.
அந்த அட்டைகள் பெரும்பாலும் இணையதளம் வாயிலாக பொருட்களை வாங்குவதற்காக பயன்படுத்தப்படுகின்றன.
இதன் காரணமாக 1.2 மில்லியன் வரை இழப்பு ஏற்பட்டது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த யுக்தியை பயன்படுத்தும் மோசடி செய்பவர்களைக் கைது செய்ய அந்த மூன்று அமைப்புகளும் வங்கிகள்,கைபேசி wallet சேவைகளான Apple உள்ளிட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
திருடப்பட்ட கிரெடிட் கார்டு விவரங்கள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பதைக் காணலாம்.
கிரெடிட் கார்டு விவரங்கள் விற்பனை இணையதளங்களில் இருந்து எடுக்கப்படுகின்றது.
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.
கிரெடிட் கார்டு விவரங்களை மோசடி செய்பவர்கள் சொந்த ஆப்பிள் வாலட்டில் பதிவிடுகிறார்கள்.
Otp எண்ணுடன் கூடிய குறுஞ்செய்தி கடன் வைத்திருப்பவருக்கு அனுப்படும்.
அதை கிளிக் செய்தால் மோசடிக்காரர்கள் இயக்கி வரும் இணையதளத்திற்கு செல்லலாம்.
நாம் அந்த லிங்கை கிளிக் செய்தவுடன் மோசடிக்காரர்கள் அட்டையை பயன்படுத்துவதற்கான அனுமதியை மிகவும் எளிமையாக பெறுகிறார்கள்.
FOLLOW US ON MORE ⏬:
Telegram id : https://t.me/sgnewsinfoo
Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL
Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==