பனி படர்ந்த ஓடு பாதையில் தரையிறங்கிய விமானம்!! தலைகீழாக கவிழ்ந்து விபத்து!!

பனி படர்ந்த ஓடு பாதையில் தரையிறங்கிய விமானம்!! தலைகீழாக கவிழ்ந்து விபத்து!!

கனடாவில் உள்ள டொரோன்டோ பியர்சன் என்ற அனைத்துலக விமான நிலையத்தில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது.

அந்த விமானத்தில் 80 பேர் பயணித்தனர் என்றும் அதில் குறைந்தது 18 பேர் காயமடைந்துள்ளனர்.
அவர்களில் ஒரு குழந்தை மற்றும் இரண்டு பெரியவர்களுக்கு கடுமையான காயம் ஏற்பட்டுள்ளதாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவின் மினியாபொலிஸ் நகரில் இருந்து கிளம்பிய விமானம் பனி படர்ந்திருந்த ஓடு பாதையில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு,மீட்பு பணிக்குழு, ஹெலிகாப்டர்கள் மற்றும் மருத்துவ உதவி வாகனங்கள் ஆகியவை அனுப்பப்பட்டன.

விமான விபத்து குறித்து விசாரணை நடந்து வருகிறது.

வாரத்தின் இறுதியில் ஏற்பட்ட பனிப்புயல் காரணமாக சம்பவம் நடந்த இடத்தில் 20 சென்டிமீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது.