Parents punished for failing to feed their daughter properly

மகளுக்கு முறையாக உணவளிக்க தவறிய பெற்றோருக்கு தண்டனை!!

மகளுக்கு முறையாக உணவளிக்க தவறிய பெற்றோருக்கு தண்டனை!!

Parents punished for failing to feed their daughter properly

ஆஸ்திரேலியாவில் மகளுக்கு சரியாக உணவளிக்க தவறியதற்காக பெற்றோருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

17 வயதுடைய அந்தப் பெண் வயதிற்கு ஏற்ற எடை மற்றும் உயரமும் அவரிடம் காணப்படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதனால் அப்பெண்ணின் தந்தைக்கு ஆறு ஆண்டு சிறைத்தண்டனை மற்றும் அந்தப் பெண்ணின் தாய்க்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் நீதிபதி வழங்கினார்.

அந்த பெண் சிறுவர்கள் பார்க்கும் கார்ட்டூன்களைப் பார்க்கிறார் என்றும் சிறுவர்கள் கொண்டாடுவது போலவே பிறந்த நாள் கொண்டாடுகிறார் என்று கூறப்பட்டது.

அவர்களது மகள் எட்டு வயதில் இருந்தே சைவ உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வந்ததாக பெற்றோர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

மேலும் அந்தப் பெண்ணின் வயதை மறைக்க முயற்சி செய்ததது தெரிய வந்தது.

ஆனால் அந்தப் பெண் வயதிற்கு ஏற்ற வளர்ச்சியில்லாமல் மெலிந்து இருப்பதால் நீதிபதி அவர்களது வாதத்தை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை.

பெற்றோர்கள் தங்களது கடமையில் இருந்து தவறிய போதும் அதற்கு வருத்தப்படாத அவர்களை தண்டிப்பது நியாயம் என்று கூறியதாக CNN செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது
.