இம்மாத இறுதியில் திறக்கப்படும் புதிய ரயில் நிலையம்!!
பிப்ரவரி மாத இறுதியில் Downtown ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங் அருகில் உள்ள ஹியூம் ரயில் நிலையம் திறக்கப்படவுள்ளது.
அப்பர் புக்கிட் தீமா ரோட்டில் அமைந்திருக்கும் ஹியூம் நிலையம் ஹில்வியூ மற்றும் பியூட்டி வேர்ல்ட் நிலையங்களுக்கு இடையில் அமைந்துள்ளது.
2021 ஆம் ஆண்டு ஹியூம் ரயில் நிலையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியது.
ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள பிற ரயில் நிலையங்களில் பயணிகள் சேவைகள் பாதிக்கப்படமால் இருப்பதை உறுதி செய்வது ஒரு சவாலாக இருந்ததாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்தது.