இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தியது. அதன் அடிப்படையில் அந்த நபரின் அடையாளம் மற்றும் அவர் இருக்கும் இடத்தையும் காவல்துறை கண்டுபிடித்து. அவரை கைது செய்வதற்கு காவல்துறை முயற்சி செய்த போது அந்த நபர் ஒத்துழைக்காமல் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாக கூறினர்.
அந்த நபர் 49 வயதுடைய காவல்துறை அதிகாரியின் மீது தடியால் தாக்கியும், மேலும் அவர் மீது குவளையையும் தூக்கி எறிந்ததாக கூறப்படுகிறது.
இதனால் அந்த காவல்துறை அதிகாரிக்கு தலை மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக அவருக்கு மருத்துவ விடுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அரசாங்க அதிகாரியை ஆபத்தான ஆயுதங்களுடன் காயப்படுத்திய குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனை, அபராதம் மற்றும் பிரம்படி தண்டனையாக விதிக்கப்படலாம்.
அரசாங்க அதிகாரியின் கடமையை செய்யவிடாமல் தடுத்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 7 ஆண்டுகள் வரை சிறை, அபராதம் மற்றும் பிரம்படி தண்டனையாக விதிக்கப்படலாம்.
மேலும் அந்த நபர் செய்ததாக நம்பப்படும் பிற குற்றங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் அவர் இன்று(பிப்ரவரி 17) இரண்டு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வார்.