தலைமுடி ஆரோக்கியத்தை அதிகரிக்க வீட்டில் பயன்படுத்தப்படும் இந்த பொருளை பயன்படுத்தலாமா??
இன்றைய காலகட்டத்தில் உணவு முறை அதாவது ஆரோக்கியம் இல்லாத உணவுகள் காரணமாக பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.இளம் தலைமுறையினர் முடி உதிர்வு மற்றும் வறட்சியான முடி உட்பட பல பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
முடி நன்றாக வளர வேண்டும் என்றும் முடி உதிர்வை குறைப்பதற்காகவும் கடைகளில் விற்பனை செய்யப்படும் கெமிக்கல் நிறைந்த ஷாம்புகளை ஆலோசனை இன்றி பயன்படுத்துவதால் முடிகளின் ஆரோக்கியம் கேள்விக்குறியாகிறது.
தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் நம் வீட்டில் இருக்கும் வெங்காயம் முடியின் பாதுகாப்பை மேம்படுத்த உதவும்.
வெங்காயத்தில் நிறைந்துள்ள கந்தக சத்து உச்சந்தலையை சுத்தம் செய்யவும், முடியின் வளர்ச்சிக்கு உதவி செய்யும்.
இதில் வைட்டமின் சி, பி 9 மற்றும் பி 6, பொட்டாசியம் சத்துக்கள் பூஞ்சை வளர்ச்சி,தொற்று நோய்க்கு எதிராக வெங்காயம் போராடும்.
வெங்காய சாரு அல்லது வெங்காய எண்ணெய் போன்றவை முடிக்கு நல்ல பலனை தரும்.
இரண்டு கரண்டி கற்றாழை ஜெல், இரண்டு கரண்டி வெங்காய சாறு ஆகியவற்றை சேர்த்து முடியில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்து 30 நிமிடங்களுக்குப் பின் முடியை கழுவ வேண்டும். இது முடியின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.
முடியில் அலர்ஜி எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வகையில் இஞ்சி சாறு மற்றும் வெங்காய சாறு சம அளவில் எடுத்து கலக்கி தலை முடிக்கு தேய்த்து பின் குளிக்கலாம்.
தேங்காய் எண்ணெய் மற்றும் வெங்காய சாறு ஆகியவற்றை கலந்து தேய்த்தால் முடி இழைகள் நீரோட்டம் அடையும்.