சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா?

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு மடங்கு அதிகரித்துள்ளதா?

சிங்கப்பூரில் போலி திருமணங்களுக்காக கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டு 5 மடங்கு அதிகரித்துள்ளது.

2023 ஆம் ஆண்டு 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதே போல கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 41.

கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை அதகரிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதே காரணம் என்று ஆணையம் தெரிவித்தது.

குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்ட போலி திருமணங்கள் குறித்து விசாரணைகள் அதிகரித்துள்ளன.

சில போலியான திருமணங்கள் குறித்து பொதுமக்கள் புகார் அளித்ததாக தெரிவிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு குடிநுழைவு விதிமுறைகளை மீறியதற்காக 536 பேர் கைது செய்யப்பட்டனர்.

அத்தகைய விதிகளை மீறி நாட்டிற்குள் நுழைந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்து வேலை வழங்கிய குற்றத்திற்காக 389 பேர் கைது செய்யப்பட்டனர்.