தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!! 14/02/2025 / #General Knowledge, #sgnewsinfo தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!! தேனீக்கள் பற்றிய வியக்க வைக்கும் விஷயங்களை இங்கு காணலாம்:▫️தேனீக்கள் தங்களின் தேவையை விட இரண்டு அல்லது மூன்று மடங்கு அதிகமான தேனை உற்பத்தி செய்கிறது.▫️பூக்களில் உள்ள மகரந்தத்தை வெவ்வேறு பூக்களுக்கு கடத்துவதன் மூலமாக தேனீக்கள் தாவரங்களுக்கு மிகப்பெரிய உதவிகளை செய்கிறது.▫️தேனீக்கள் தம் வாழ்நாளில் ஒரே ஒரு முறை தான் கொட்டுகின்றது. ▫️உயரமான மரப் பொந்துகள்,மரைகிளைகள், பொருட்களின் நுனிப்பகுதிகளில் தேனீக்கள் அவற்றின் கூடுகளை கட்டுகிறது.▫️குளிர்காலத்தில் பயன்படுத்துவதற்காக அதிக அளவு தேனை சேமித்து வைக்கிறது.▫️துருவப் பகுதிகளை தவிர உலகம் முழுவதும் தேனீக்கள் வசிக்கிறது.▫️தேனீக்கள் மணிக்கு 25 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது ஆகும். சிங்கப்பூரில் work பெர்மிட்டில் வேலை வாய்ப்பு!! ▫️ கூட்டில் ஒரே ஒரு ராணி தேனீ மட்டுமே இருக்கும்.ஒரு கூட்டில் இருக்கும் ராணி தேனீ இறந்து விட்டால் வேறு ராணி தேனியை தேர்வு செய்யும்.▫️அதற்காக சில புழுக்களுக்கு சிறப்பு உணவு கொடுத்து வேலைக்கார தேனீக்கள் தயார் செய்து வைக்கின்றன.▫️வேலைக்கார தேனீக்கள் தான் கூடுகளை கட்டுகிறது. பூந்தேனை சேமிக்கிறது. புழுக்களை பராமரிக்கிறது.அவை தான் கூட்டையும் சுத்தமாக வைத்திருக்கிறது. ▫️ஒரு ராணி தேனீ ஒரே நாளில் 2500 முட்டைகள் வரை இடும்.தன் வாழ்நாளில் சுமார் 8 லட்சம் முட்டைகளை இடுகிறது.▫️ஒரு தேனி தன் வாழ்நாளில் சுமார் ஒன்றரை தேக்கரண்டி தேனை சேமித்து வைக்கிறது.▫️ஒரு கூட்டில் சுமார் 50,000 தேனீக்கள் வசிக்கும்.FOLLOW US ON MORE ⏬:Telegram id : https://t.me/sgnewsinfooFacebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwLInstagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw== இந்த வேலை தெரியவில்லையா? ஆனால் இன்டெர்வியூவில் கலந்து கொள்ள விருப்பமா? பயிற்சி உண்டு!!