தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

மியான்மரில் இணைய மோசடி நிலையங்களில் இருந்து பலர் மீட்பு!!

மியான்மரில் இணைய மோசடி நிலையங்களில் இருந்து பலர் மீட்பு!!

தேனீக்கள் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள்!! இதோ!!

மியான்மரில் உள்ள இணைய மோசடி நிலையங்களில் இருந்து 260 க்கும் அதிகமானவர்களை மீட்டு தாய்லாந்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சீன நாட்டைச் சேர்ந்தவர்கள் தாய்லாந்து மற்றும் மியான்மருக்கு இடையே உள்ள எல்லைப் பகுதியில் இணைய மோசடி நிலையங்களை நடத்தி வந்தனர்.

அதில் சில வெளிநாட்டினரை சட்டத்திற்கு புறம்பான வேலைகளைச் செய்யும் படி கட்டாயப்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர்களில் சிலர் கடத்தப்பட்டதாகவும், சிலர் தாங்களாகவே முன்வந்து வேலை செய்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தாய்லாந்து அதிகாரிகள் அந்த நிலையங்களிலிருந்து மீட்கப்பட்டவர்களைச் சோதனை செய்து அதன்பின் அவர்களுடைய சொந்த நாடுகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

தாய்லாந்து எல்லையில் உள்ள மோசடி நிலையங்கள் சீனாவில் உள்ள சமூக ஊடகங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தாய்லாந்தை ஆபத்தான இடமாக சீன மக்கள் பலர் கருதுகின்றனர்.

மோசடி கும்பல்களை ஒடுக்க ஆசியான் நாடுகள் இன்னும் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என சீனா கேட்டுக் கொண்டது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==