FIFA கால்பந்து உலகக் கோப்பை!! 2034 தொடரை எந்த நாடு நடத்தும்?

2030 மற்றும் 2034 ஆம் ஆண்டில் நடைபெறவிருக்கும் கால்பந்து உலகக் கோப்பை தொடரை எந்த நாடு நடக்கும் என்பதற்கான அறிவிப்பை பிப்ரவரி 12 ஆம் தேதி வெளியிட்டது.

உலகில் மிகவும் அதிக அளவில் மக்களால் பார்க்கப்படும் தொடரில் உலகக்கோப்பை முதல் இடத்தில் உள்ளது.

உலகம் முழுவதிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இந்த உலகக் கோப்பை போட்டிகளை நடத்துவதன் மூலம் வருவார்கள்.

2022 FIFA ஒரு உலகக் கோப்பை தொடரை கத்தார் வெற்றிகரமாக நடத்தியது.2026 ஆம் ஆண்டு FIFA உலகக் கோப்பை தொடரை அமெரிக்கா,கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகள் இணைந்து நடந்தவிருக்கிறது.

இந்த சூழலில் 2030 மற்றும் 2034 ஆம் ஆண்டு நடைபெறும் உலகக் கோப்பை தொடரை யார் நடத்துவது . இந்த கேள்விக்கு சுவிட்சர்லாந்தில் உள்ள ஸூரிச் நகரில் அறிவித்தார்.

அதன்படி 2030 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரை ஆறு நாடுகள் இணைந்து நடத்தும் என்று அவர் கூறினார்.

இந்த தொடரை ஸ்பெயின், போர்ச்சுகல், மொராகோ, அர்ஜென்டினா, பராகுவே,உருகுவே ஆகிய நாடுகள் இணைந்து நடத்தும் என்று அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2034 ஆம் ஆண்டு FIFA கால்பந்து தொடரை சவுதி அரேபியா நடத்தும் என்று தலைவர் ஜியானி இன்பானிட்டோ அறிவித்தார்.

இது சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் எடுத்த முயற்சிக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது.

கால்பந்து போட்டிகளுக்காக பல கோடி ரூபாயை சவூதி அரேபியா முதலீடு செய்து நடத்தி வருகிறது.

ரொனால்டோ நெய்மார் போன்ற வீரர்கள் ஏற்கனவே சவுதி அரேபியாவில் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் அங்கு நடைபெறும் உலக கோப்பை சவூதி அரேபியாவுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக 15 மைதானங்களை கட்ட சவுதி அரசு முடிவு எடுத்துள்ளது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==