இதனை அடுத்து இலோன் மஸ்கின் அரசாங்க செலவின குறைப்பு நிறுவனமான `டோஸ்’ க்கு அரசாங்க ஊழியர்களை குறைக்க அதிக அதிகாரம் வழங்கும் உத்தரவில் திரு. ட்ரம்ப் கையெழுத்திட்டார்.
அந்த அமைப்பு ஜனநாயக கட்சியினரால் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்புகளில் வெளிப்படுத்த தன்மை இல்லை என்றும், சட்டரீதியான சவால்களை எதிர்கொள்கிறது என்றும் அந்தக் கட்சியினர் கூறுகிறது.
இந்நிலையில் புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது.
மில்லியன் கணக்கான அமெரிக்கர்களின் தனிப்பட்ட தகவல்களைக் கொண்ட அமெரிக்க கருவூலத்தின் கட்டண அமைப்பில் மாற்றங்களைச் செய்ய இலோன் மஸ்க்கின் உதவியாளர் ஒருவருக்கு தவறுதலாக அனுமதி வழங்கப்பட்டதாக பிப்ரவரி 12 ஆம் தேதி துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
25 வயது உடைய ஊழியருக்கு அரசாங்கத்தின் பல ட்ரில்லியன் கணக்கான டாலரை கையாளும் அமைப்பில் மாற்றங்கள் செய்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.