சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!!

சிங்கப்பூரில் வேலை செய்ய ஆர்வம் கொள்ளும் மலேசிய மாணவர்கள்!! முக்கியத் தேர்வைக் கூட எழுத செல்லவில்லையாம்!!

மலேசியக் கல்வி சான்றிதழுக்காக தேர்வு எழுத வேண்டிய 900 க்கும் அதிகமான மாணவர்கள் அந்த முக்கிய தேர்வை எழுத செல்லவில்லை.

அதற்கு பதிலாக அவர்களில் சில மாணவர்கள் சிங்கப்பூரில் வேலைக்கு செல்வதற்கு முடிவெடுத்துள்ளனர்.

வேலைகளுக்கு குறைந்த திறன்கள் தேவைப்பட்டாலும் சம்பளம் அதிகமாக இருக்கும் என்பதால் மாணவர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடிவு செய்ததாக அந்த மாநில கல்வி குழு உறுப்பினர் அஸ்னான் தமின் கூறியதாக உத்துஷான் என்ற மலேசிய ஊடக செய்தி தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஜோகூரில் கடந்த ஆண்டு எஸ்.பி.எம் தேர்வு எழுதாத மாணவர்களை விட இந்த முறை அவ்வாறு செய்த மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக என்று திரு.தமின் குறிப்பிட்டார்.

“சிங்கப்பூரில் வேலை செய்ய எஸ் பி எம் சான்றிதழ் கட்டாயமாக்கப்படாததே நாங்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்
தங்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவதில் எஸ் பி எம் சான்றிதழின் முக்கியத்துவம் குறித்து மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் பள்ளிகள் வலியுறுத்த வேண்டும்” என்று அவர் கூறினார்.

மலேசியாவின் கல்வி அமைச்சர் ஃபத்லினா சிதெக், கடந்த வருடம் 97 சதவீத மாணவர்கள் எஸ்பிஎம் தேர்வு எழுதியதாகவும் ஏறக்குறைய 10000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒவ்வொரு நாளும் 3,00,000-க்கும் அதிகமானோர் மலேசிய எல்லையைக் கடந்து சிங்கப்பூருக்கு வேலைக்கு சென்று வருகின்றனர்.

அவர்களில் பலர் துப்புரவு பணி போன்ற தேர்ச்சி குறைவாக தேவைப்படும் பணிகளை செய்வதாக கூறப்படுகிறது.

கடந்த 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி நிலவரப்படி,மலேசியாவில் வீட்டில் இருந்து கொண்டே சிங்கப்பூரில் பணி புரியும் மலேசியர்களில் மூன்றில் இரண்டு பங்கு பேர் மாத சம்பளமாக $1500 முதல் $3599 வெள்ளி வரை சம்பாதிப்பதாக புள்ளிவிவரத்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==