கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!!

கவனக்குறைவாக காரை ஓட்டி வெளிநாட்டு ஊழியரின் நிரந்தர ஊனத்திற்கு காரணமான நபருக்கு சிறை!!

2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10 ஆம் தேதி சிராங்கூன் சாலையில் விபத்து நடந்தது.

கே ஈ வா என்பவர் அவரது மனைவி மற்றும் மகளுடன் காரில் சென்று கொண்டிருந்தபோது போக்குவரத்து விளக்கு பச்சை நிறமாக மாறியதும் புறப்பட்டார். அப்போது அவரது கார் மற்றொரு வாகனத்தில் மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த அவரது கார் வலது புறத்தில் உள்ள நடைபாதை மேல் ஏறியது.

அங்கு சாலை பணியில் ஈடுபட்டிருந்த கட்டுமான ஊழியர்கள் இருவர் மீது கார் மோதியது.

அதில் தூக்கி வீசப்பட்ட ஊழியர் ஒருவர் மற்றொரு காரின் முன்பகுதியில் மோதி கீழே விழுந்தார்.

கேயின் கார் தொடர்ந்து முன்னோக்கி சென்று கீழே விழுந்த ஊழியரின் காலில் ஏறியது.

அந்த விபத்தில் ஊழியரின் இடது காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நிரந்தரமாக அவரது இடது கால் செயலிழக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.

காயம் ஏற்பட்டதன் காரணமாக அந்த ஊழியர் 7 மாதங்களுக்கு முன் இந்தியாவிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முன் பலமுறை கே வாகனம் ஓட்டும் போது குற்றங்கள் புரிந்துள்ளதாகவும் 2019 ஆம் ஆண்டு கார் ஓட்டும்போது அவர் சிவப்பு விளக்கை மீறி சென்றுள்ளார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் கட்டுமான ஊழியர் ஒருவர் நிரந்தரமாக ஊனமானதன் காரணமாக 86 வயதுடைய கே.ஈ.வா என்பவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை அல்லது ஐந்தாயிரம் வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

கே குற்றத்தை ஒப்புக்கொண்டாலும் அவரது வயது மற்றும் உடல் நலக்குறைபாடுகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அவருக்கு 4 மாதச் தண்டனை வழங்கப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார்.

மேலும் அவர் சிறையிலிருந்து விடுதலையான பின் 5 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan