ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுகிறதா? சிவகார்த்திகேயன் முடிவு என்ன?

ஜனநாயகன் படத்துடன் பராசக்தி மோதுகிறதா? சிவகார்த்திகேயன் முடிவு என்ன?

விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வருகிறது.

இப்படத்தில் பூஜா ஹெக்டே,பிரியாமணி,கவுதம் மேனன்,மமிதா பைஜு,பாபி தியோல்,நரேன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .

இப்படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது.
இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்,சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்,ஜெயம் ரவி,அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் நடித்து வரும் பராசக்தி படமும் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளிவரும் என தகவல் வெளிவந்துள்ளது.

இந்த நிலையில் இந்த இரண்டு படங்களும் மோதுகிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சிவகார்த்திகேயன் எந்த காரணத்தை கொண்டும் ஜனநாயகன் படம் வெளிவரும் நாளன்று நம் படம் வர கூடாது என்பதில் மிகவும் கவனத்துடன் சிவகார்த்திகேயன் இருக்கிறார் என்று கூறுகின்றனர்.

இதனால் ஜனநாயகம் வெளியிடுவதற்கு முன்பாகவே பராசக்தி படத்தை வெளியிட திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.


சிவகார்த்திகேயனின் இந்த அதிரடி முடிவின் காரணமாக ஜனநாயகன் படம் வெளிவரும் நாளன்று வெளிவராது என்பதை உறுதி செய்துள்ளனர்.

இந்த தகவலை பிரபல மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==