அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள்!! 2 வாரத்தில் மூன்றாவது விபத்து!!

அமெரிக்காவில் அடுத்தடுத்து நிகழும் விமான விபத்துகள்!! 2 வாரத்தில் மூன்றாவது விபத்து!!

அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தில்
தனியார் விமானம் ஒன்று மற்றொரு விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த கோர சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

Scottsdale விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெறுகின்றன.

உள்ளூர் நேரப்படி நேற்று(பிப்ரவரி 11) பிற்பகல் 2.40 மணியளவில் விபத்து ஏற்பட்டது.

விமான நிலையத்தில் தரையிறங்கிய தனியார் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி மற்றொரு தனியார் வளாகத்தில் நின்று கொண்டிருந்த விமானத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து அந்த ஓடு பாதை மூடப்பட்டிருந்தது. அது அவ்வாறே சில காலம் மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க விமான போக்குவரத்து தீவிர கண்காணிப்படும் நேரத்தில் இந்த விபத்து நடந்துள்ளது.

அமெரிக்க வரலாற்றில் கடந்த இரண்டு வாரங்களில் அடுத்தடுத்து நடந்த மூன்று மோசமான விமான போக்குவரத்து விபத்துகளில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.அதற்கான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.