நகர்ப்புற திட்டங்களில் பொறியியல் துறையின் பங்கு இன்றியமையாதது. சிங்கப்பூர் 2035 ஆம் ஆண்டிற்குள் அதன் கரியமில வாயு வெளியேற்றத்தை சுமார் 50 மில்லியன் டன் குறைக்க திட்டமிட்டுள்ள நிலையில் உள்துறை துணையமைச்சர் ஃபைஷல் இப்ராஹிம் அவ்வாறு கூறினார்.
அடுத்த மாதம் உலகப் பொறியியல் தினம் கொண்டாடப்பட உள்ளது.
அதனை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை அமைச்சர் துறை வல்லுநர்களுடன் பேசினார்.
பொறியியல் துறையின் புத்தாக்கத்தை வெளிப்படுத்தும் பல பசுமை தீர்வுகள் உருவாக்கப்பட்டுள்ளன இணை பேராசிரியர் ஃபைஷல் தெரிவித்தார்.
புத்தாக்க முயற்சிகளை சிங்கப்பூர் தொடர வேண்டும் என்றும் அதன் வழியில் சுற்றுச்சூழலுக்கு உகந்த தீர்வுகளை வழங்குவதில் சிங்கப்பூர் தலைமைத்துவத்தை அடைய முடியும் என்றும் அவர் கூறினார்.