ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!!

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு தங்கப்பதக்கத்தை பெற்று தந்த வீரருக்கு கிடைத்த சிறப்பு அங்கீகாரம்!!

சிங்கப்பூரின் ஒலிம்பிக் தங்கமகன் ஜோசப் ஸ்கூலிங் நீச்சல் விளையாட்டிற்கான Hall of fame என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளார் .

மைதானத்தில் இருந்த போது தன் மீது நம்பிக்கை வைத்திருந்த ரசிகர்கள் அனைவருக்கும் அந்த கெளரவத்தில் பங்கு உள்ளது என்று ஸ்கூலிங் தெரிவித்தார்.

இந்த வருடம் 11 பேர் கௌரவிக்கப்பட்டனர். அந்த அங்கீகாரத்தைப் பெறும் முதல் சிங்கப்பூரர் 29 வயதுடைய ஸ்கூலிங்.

ஜூலை 28ஆம் தேதி சிங்கப்பூரில் உலக நீர் விளையாட்டு வெற்றியாளர் போட்டி நடைபெறும். அப்போது ஸ்கூலிங் கௌரவிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டது.

அத்தகைய அங்கீகாரத்திற்கு கிடைத்ததற்கு என்றென்றும் நன்றி என்று ஸ்கூலிங் கூறினார்.

2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோ ஒலிம்பிக் போட்டியில் 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி பாணி நீச்சல் போட்டியில் ஸ்கூலிங் தங்கப்பதக்கம் வென்றார்.

நீச்சல் உலகின் முடிசூடா மன்னனாய் திகழ்ந்த மைக்கேல் பெல்பை ஸ்கூலிங் தோற்கடித்தார்.

ஒலிம்பிக்கில் சிங்கப்பூருக்கு கிடைத்த ஒரே தங்கப் பதக்கத்தை ஸ்கூலிங் வென்றார்.