OpenAI ஐ வாங்க முயற்சிக்கும் உலகின் ஆகப்பெரிய பணக்காரர்!!
அமெரிக்காவில் எலோன் மஸ்கின் தலைமையிலான ஒரு குழு OpenAI நிறுவனத்தை 97.4 பில்லியன் டாலருக்கு வாங்க முயற்சிப்பதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
OpenAI லாப நோக்கமற்ற நிறுவனமாக மாறுவதை தடுப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பு மஸ்க் வழக்கு தொடுத்தார்.
நிறுவனத்தை வாங்குவதற்கான அவருடைய முயற்சி அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் அல்ட்மனுடன் நீண்ட காலமாக நிலவும் பதற்றத்தை அதிகரிக்கும்.
அந்த முயற்சி குறித்து அல்ட்மன், “ நன்றி,ஆனால் அதில் எங்களுக்கு எந்த விருப்பமும் இல்லை. உங்களுக்கு விருப்பம் இருந்தால் நாங்கள் ட்விட்டரை 9.74 பில்லியன் டாலருக்கு வாங்குவோம்” என்று அவரது X பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
மஸ்க் 2015 ஆம் ஆண்டு திரு.அல்ட்மனுடன் இணைந்து OpenAI ஐ நிறுவினார்.
ஆனால் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து 2023 ஆம் ஆண்டு xAI என்ற போட்டி நிறுவனத்தை தொடங்கினார்.
செயற்கை நுண்ணறிவிலிருந்து மனிதர்களுக்கு பயனளிக்கக்கூடிய OpenAI தடம் மாறி லாபம் ஈட்ட முயற்சிப்பதாக மஸ்க் குற்றம் சாட்டுகிறார்.