வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்…!!!!

வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் டிரம்பின் புதிய வரிகள்...!!!!

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் வர்த்தகச் சிக்கலை அதிகரிக்கும் வகையில் கூடுதல் வரிகளை அறிவித்துள்ளார்.

இந்த வார தொடக்கத்திலிருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்திற்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார்.

கனடா, பிரேசில் மற்றும் மெக்சிகோவில் இருந்து கடந்த ஆண்டு அதிகளவு இரும்பு மற்றும் அலுமினியத்தை அமெரிக்கா இறக்குமதி செய்தது.

மெக்சிகோ மற்றும் கனேடிய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று கூறிய திரு.டிரம்ப், சில நாட்களுக்கு முன்பு அதை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில் தற்போது திரு.டிரம்ப் புதிய வரிகளை அறிவித்துள்ளார்.

கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு பதில் வரி விதிக்கப்போவதாக எச்சரித்துள்ளார்.

மெக்சிகோ அமெரிக்கா மீது ஐந்திலிருந்து 20 சதவீதம் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==