சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிங்கப்பூர் இளையர் கால்பந்து லீக்!!

சிங்கப்பூர் சாதனைப் புத்தகத்தில் சிங்கப்பூர் இளையர் கால்பந்து லீக்!!

சிங்கப்பூர் சாதனை புத்தகத்தில் சிங்கப்பூரின் இளைஞர் கால்பந்து லீக் இடம்பிடித்து சாதனைப் படைத்துள்ளது.

ஒரே நேரத்தில் அதிக ஆட்டங்களைத் தொடங்கியதால் அந்த சாதனை நிகழ்ந்தது.

நேற்று காலை 8 மைதானத்தில் 36 கால்பந்து ஆட்டங்கள் ஒரே நேரத்தில் தொடங்கின.

புதிய பருவத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில் தீவு முழுவதும் 6000 இளம் ஆண் மற்றும் பெண் கால்பந்து வீரர்கள் களமிறங்கினர்.

Unleash The Roar எனும் தேசிய திட்டத்தின் கீழ் கால்பந்து லீக் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பருவத்தில் மொத்தம் 316 அணிகள் பங்கேற்கும் அதோடு இவை சென்ற வருடத்தை விட 58 சதவீதம் அதிகம்.

புதிய `மகளிர் மட்டும்’ லீக்கில் 18 அணிகள் உச்சப் பரிசுக்கு போட்டியிடும்.

நவம்பர் மாதம் பருவம் முடியும் வரை வாரந்தோறும் போட்டிகள் நடைபெறும்.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==