பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்குமாறு ACRES கேட்டுக்கொண்டது!!

பாம்பு ஆண்டை முன்னிட்டு சட்டவிரோதமாக பாம்புகள் வாங்குவதை தவிர்க்குமாறு வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பான ACRES பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பு 2024 ஆம் ஆண்டில் சட்டத்திற்கு எதிராக பாம்புகள் வைத்திருப்பவர்கள் பற்றி 15 புகார்கள் வந்ததாக தெரிவித்துள்ளது.

இதுபோன்ற சம்பவங்கள் கண்டுபிடிக்காமலும் புகார்களிக்கப்படாத வழக்குகள் அதிகமாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அதிகமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

2023 ஆம் ஆண்டில் நான்கு புகார்கள் மட்டும் வந்ததாக கூறப்படுகிறது.சீனப் புத்தாண்டின் போது அந்த ஆண்டைக் குறிக்கும் ஒரு விலங்கை வாங்குவது நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது.

முயல் ஆண்டான 2023 ஆம் ஆண்டில் மக்கள் அதிக அளவில் முயல்கள் விற்பனையானதாக செல்லப்பிராணி விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.சீனப் பாரம்பரியத்தில் பாம்புகள் அதிர்ஷ்டத்தையும்,செழிப்பையும் தரும் விலங்காக கருதப்படுகிறது.

2013 ஆம் ஆண்டு பாம்பு ஆண்டாக இருந்தபோது பொது இடங்களில் பாம்புகள் அதிக அளவில் விடப்பட்டதாக அமைப்பு குறிப்பிட்டது.