பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

பார்சலைச் சோதித்த போது காத்திருந்த அதிர்ச்சி!!

தாய்லாந்தில் ஒரு பார்சலில் குழந்தைகளின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

சா கேயோ நகரில் உள்ள தளவாடக் கடை பார்சல்களை அனுப்புவதற்கு முன்பு அவைகளை சோதனை செய்வது வழக்கமாகும்.

அவ்வாறு சோதனை செய்து கொண்டிருக்கும் போது பார்சல் ஒன்றில் உடல்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் அறிந்து வந்த காவல்துறை விசாரணையைத் தொடங்கினர்.

முதற்கட்ட விசாரணையில்,பார்சலை கொடுத்த சாய் என்ற நபர் வேறொருவரின் சார்பாக பார்சலை அனுப்ப முயன்றதாக தெரியவந்தது.

தன்னை ஒரு மந்திரவாதி என்று கூறிக் கொள்ளும் போல் என்ற நபர் அந்த பார்சலை அவருக்கு கொடுத்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

குழந்தைகளின் உடல்களை வேறு இடத்தில் இருந்து வாங்கியதாக போல் ஒப்புக்கொண்டார்.

அந்த உடல்களை சியாங் மாய் நகரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்க எண்ணியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

போல் எங்கிருந்து உடல்களை வாங்கினார் என்பது குறித்தும், மேலும் வேறு யாராவது குழந்தை கடத்தலுடன் தொடர்புடையவர்களா என்பது குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விசாரித்து வருவதாக The Nation ஊடகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US ON MORE ⏬:

Telegram id : https://t.me/sgnewsinfoo

Facebook id : https://www.facebook.com/profile.php?id=61571255376519&mibextid=ZbWKwL

Instagram id : https://www.instagram.com/sg_news_info/profilecard/?igsh=MWs2eWF0NmJoN3N4Mw==